செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 25 மே 2019 (09:13 IST)

கனிமொழிக்கு கிடைக்கவிருக்கும் புதிய பதவி! ஸ்டாலின் மெகா திட்டம்

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திமுக அபார வெற்றி தேசிய அளவில் மூன்றாவது கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆளும் கட்சியில் இல்லை என்ற மிகப்பெரிய குறை, கடந்த முறை அதிமுகவுக்கு இருந்த நிலைமை இந்த முறை திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கனிமொழி உள்பட ஒருசிலருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற கனவு கானல் நீரானது
 
 
இந்த நிலையில் இன்று புதியதாக தேர்வு செய்யப்பட்ட திமுக எம்பிக்களின் கூட்டம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார். அனேகமாக இந்த பதவிக்கு கனிமொழி தேர்வு செய்யப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. 

 
அதே நேரத்தில் திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தான் என்றும், அவரே திமுக நாடாளுமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த இரண்டில் எது நடக்கும் என்பது இன்னும் ஒருசில மணி நேரத்தில் தெரிந்துவிடும்