தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியுமா? நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
நாளை தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் நாளைய தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளை தீபாவளி திருநாள் கொண்டாட இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ஏற்கனவே அக்டோபர் 30 முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சற்றுமுன், நாளை 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, திண்டுக்கல், மதுரை, திருச்சி, அரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால், இந்த பகுதியில் தீபாவளி கொண்டாடுவது மற்றும் பட்டாசு வெடிப்பது சிரமம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran