வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 மார்ச் 2021 (08:59 IST)

திமுகவுடன் சேர்கிறதா தேமுதிக? அடுத்த கட்ட நகர்வு!

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள தேமுதிக இப்போது திமுக கூட்டணியில் சேர ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் இவர்கள் கேட்பதும் அவர்கள் கொடுப்பதாக சொல்வதுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. மேலும் அதிமுக டெபாசிட் கூட ஒரு தொகுதியிலும் வாங்காது என தேமுதிக துணைச்செயலாளர் சுதீஷ் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தேமுதிகவுக்கு மங்கு திசையாகவே உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தல்தான் அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது. இதனால் எப்படியாவது குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என நினைக்கும் தேமுதிக அடுத்தக் கட்டமாக திமுக கூட்டணிக்கு நகர்வது குறித்து ஆலோசித்த்து வருகிறதாம். 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலேயே திமுக தேமுதிக கூட்டணி உருவாக இருந்து கடைசி கட்டத்தில் கலைந்தது. தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை தாங்கி படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.