புதன், 1 பிப்ரவரி 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified வெள்ளி, 7 அக்டோபர் 2022 (22:41 IST)

அரசுகலைக்கல்லூரியில் நடைபெற்ற வன உயிரின வாரவிழா நிகழ்ச்சி

karur
கொடுக்காப்பள்ளி மரம் நன்கு வளர்ந்த பிறகு மாணவ, மாணவிகளுக்கு கொடுக்க வேண்டும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
 
 
கரூர் அடுத்துள்ள தாந்தோன்றிமலை அரசுகலைக்கல்லூரியில் நடைபெற்ற வன உயிரின வாரவிழா நிகழ்ச்சியில், அனைத்து தரப்பு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இதில் மணவாசி அரசு நடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி அவர்களுக்கு பழம் தரும் கொடுக்காப்பள்ளி மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது. இதில் மரம் பெரியதாகி கொடுக்காப்பள்ளிகளை மாணவ, மாணவிகளுக்கு கொடுக்க வேண்டுமென்றும் கரூர் கலெக்டர் பிரபுசங்கர் கேட்டுக் கொண்டார்.