செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜூன் 2018 (13:20 IST)

கள்ளக்காதலுக்கு தடை - கணவனை போட்டுத்தள்ளிய மனைவி

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த தனது கணவனை, கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ல சொம்பனார்கோவில் என்ற பகுதியில் வசித்து வந்தவர் அறிவழகன்(48). இவரின் மனைவி ரேகா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
 
ரேகாவிற்கு ராஜசேகர் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. அறிவழகன் வீட்டில் இல்லாத நேரத்தில் ராஜசேகர் வீட்டிற்கே வந்து ரேகாவுடன் அவர் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் அறிவழகனுக்கு தெரிய வர மனைவி ரேகாவை கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்கிடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவழகன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கள்ளக்காதல் விவாகரம் தொடர்பாக ரேகாவுடன் சண்டை போட்டுள்ளார். அதன் பின் அவர் தூங்கிவிட்டார். எனவே, தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடஞ்சலாக இருக்கும் அறிவழகனை கொலை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ரேகாவிற்கு ஏற்பட்டது. எனவே, கள்ளக்காதலன் ராஜசேகரை செல்போனில் அழைத்து, அறிவழகனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
 
அதன்படி, தூங்கிக்கொண்டிருந்த ராஜசேகரின் முகத்தை தலையணையால் அழுத்தி இருவரும் கொலை செய்தனர். அடுத்த நாள் காலை அவர் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டதாக உறவினர்களிடம் ரேகா கூறியுள்ளார். ஆனால், அதில் சந்தேகமடைந்த உறவினர்கள் அறிவழகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.
 
இது தொடர்பான விசாரணையில் தனது கணவனை கொலை செய்ததை ரேகா ஒப்புக்கொண்டார். எனவே அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான ராஜசேகரையும் போலீசார் தேடி வருகின்றனர்.