திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2016 (18:36 IST)

சப்பாணி 8 பேரை கொன்றது ஏன்? : நரபலியா அல்லது உடற்பாகம் திருட்டா?

8 பேரை கொன்று புதைத்த வழக்கில் சப்பாணி உடற்பாகங்களை திருடி விற்பதற்காக கொலை செய்தாரா? அல்லது நரபலிக்காக கொலை செய்தாரா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 
கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்தவர் தங்கதுரை (35). மாயமானார். இதுகுறித்து திருவெறும்பூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தங்கதுரையின் நண்பரான சப்பாணி (35) கொன்று புதைத்தது தெரியவந்தது.
 
சப்பாணி கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, தங்கதுரை உள்பட 8 பேரை அவர் கொன்றதும், அதில் அவரது தந்தை தேக்கனும் ஒருவர் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. புதையல் எடுப்பதாக கூறியும், நகை - பணத்துக்காகவும் கொலை செய்தது தெரியவந்தது.
 
இந்நிலையில், கொலையான அதிமுக கவுன்சிலர் குமரேசன், சத்தியநாதன், விஜய் விக்டர், கோகிலா, சப்பாணியின் தந்தை தேக்கன் ஆகிய 5 பேரின் உடல்களை தோண்டி எடுத்தனர். அப்போது கைப்பற்றப்பட்ட முக்கிய பாகங்கள் மற்றும் எலும்புகளை மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
மேலும் இருவரது உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி வீசியதாக சப்பாணி கூறியதை அடுத்து உடல்களின் பாகங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, 
 
இந்நிலையில் மீட்கப்பட்ட உடல்களில் தலை, கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி புதைக்கப்பட்ட இடங்களில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஊசி, மருந்து பாட்டில்கள் கிடந்தன. இதனால் உடல் உறுப்புகள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
 
மேலும் சப்பாணியின் மனைவி மோகனபிரியா சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். மோகன பிரியாவை கண்டுபிடிப்பதற்காக அவர் வெற்றிலையில் ‘மை‘ போட்டு பார்த்து கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணி சாமியார் செல்லையாவை அணுகி உள்ளார். அவரின் உதவியுடன் தான் நரபலிக்காக இந்த கொலைகள் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.