வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2024 (13:57 IST)

ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரஸில் பதவி கொடுத்தது ஏன்?

Anand Srinivasan
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ நியமிக்கப்படார். அதேபோல் அக்கட்சியின் ஊடகம் மற்றும் தகவல்துறை மாநில தலைவராக  ஆனந்த் சீனிவாசன்  நியமிக்கப்பட்ட நிலையில், இன்று பொறுப்பேற்றார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் எந்தப் பிரச்சனையும் கிடையாது. வரும் நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்கள் பேச்சுவார்த்தை தொடரும்.அதனால் இரு தலைமையும் பேசி முடிவெடுக்கும். தமிழகம் புதுசேரியில் 40 தொகுதிகளையும் ஜெயிக்கும் என்று கூறினார்.
 
மேலும், இந்தப் பொறுப்பின் மூலம் தேசிய ஊடகங்களை கார்ப்ரேட்டுகள் வாங்கியுள்ளனர். தமிழகத்தில் அப்படியில்லை. பாஜக பற்றிய ஊழல்களை தெரியப்படுத்துவேன்.
 
பதஞ்சலி யோகா மக்களின் உயிரோடு விளையாடியுள்ளது. ஆயுஸ் மினிஸ்டரி கண்ணை மூடியுள்ளதாக சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. இதுமாதிரி விஷங்களை தமிழகத்திற்கு எடுத்துச் சொல்லவே என்னை நியமித்துள்ளனர்.

எனக்கு 20 லட்சம் பாயோயர்ஸ் உள்ளனர். அதேபோல் இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸுக்கு பாலோயர்களை கொண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், எம்ஜிஆர் படத்திற்குப் பதிலாக நடிகர் அரவிந்த் சாமியின் புகைப்படத்தை பேனராக வைக்கும் நிலையில்தான்  அதிமுக உள்ளது. அதிமுகவின் வாக்குகளை பாஜகவுக்கு கொடுக்கும் நிலையில் அக்கட்சி உள்ளது என்று கூறினார்.