1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 30 மே 2018 (20:27 IST)

தூத்துகுடி சம்பவத்திற்கு விஜய் வாய் திறக்காதது ஏன்?

தூத்துகுடி துப்பாக்கி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோலிவுட்டில் இருந்து ரஜினி, கமல், விஷால் உள்பட பலர் கருத்து தெரிவித்திருந்தாலும் ரஜினி, கமலுக்கு பின்னர் பெரிய நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் இருவருமே இன்றுவரை இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை
 
அஜித் எந்த பிரச்சனையிலும் தலையிட மாட்டார் என்பதால் அவர் கருத்து தெரிவிக்காதது ஆச்சரியத்தை தரவில்லை. ஆனால் பணமதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டு, அனிதா மரணம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்த விஜய், தூத்துகுடியில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாமல் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளமால் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
விஜய் இந்த பிரச்சனை குறித்து காட்டமான ஒரு கருத்தை தெரிவித்திருந்தால் அந்த கருத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் உலக அளவிற்கு டிரெண்ட் ஆக்கியிருப்பார்கள். ஆனால் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காதது அவரது ரசிகர்களுக்கே ஏமாற்றமாக இருப்பதாக தெரிகிறது.