1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2017 (17:45 IST)

கர்ப்பிணிப் பெண்களை ஏன் போலீசார் தாக்கினார்கள்? - அமீர் காட்டம்

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகம் முழுவதும்  நடந்த கலவரத்தின் போது பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை இயக்குனர் அமீர் கண்டித்துள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டிற்காக சென்னை உட்பட தமிழகமெங்கும் அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது நேற்று போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். 
 
இதுபற்றி கண்டனம் தெரிவித்த இயக்குனர் அமீர் “போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும்.
 
போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக சொல்கிறார்கள். அப்படியெனில் அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். எல்லோரின் மீதும் தடியடி நடத்தியது ஏன்? குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மீதும் எதற்காக தாக்குதல் நடத்தினார்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.