1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2021 (07:53 IST)

சசிகலாவுக்காக மூடப்பட்டதா ஜெயலலிதா நினைவகம்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவகம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் திறந்து வைக்கப்பட்டது என்பதும் இதனை பார்ப்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து கொண்டு இருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று முதல் திடீரென ஜெயலலிதா நினைவகம் மூடப்பட்டது. ஜெயலலிதா நினைவகத்தில் அருங்காட்சியகம் உள்ளிட்ட ஒரு சில பணிகள் நடப்பதன் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் இந்த பணி முடிந்த பின்னரே பார்வையாளர்களுக்காக ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை நேற்று அறிவித்து இருந்தது 
 
ஆனால் இதுகுறித்த தகவல் தெரியாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஜெயலலிதா நினைவகத்தை பார்க்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் நினைவகம் மூடப் பட்டிருப்பதால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இது குறித்து முன்கூட்டியே தகவல் அறிவிக்காதது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த நிலையில் பெங்களூரில் இருக்கும் சசிகலா, சென்னைக்கு வரும் 7ஆம் தேதி வருவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவருக்காகவே சசிகலா ஜெயலலிதாவின் நினைவகம் மூடப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி கிளம்பி வருகிறது