1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK secretary try to meet sasikala,

சசிகலாவை சந்திக்க சென்ற அதிமுக பிரமுகர்: அனுமதி கிடைக்காததால் திரும்பியதாக தகவல்!

சசிகலா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் அவரை அதிமுக செயலாளர் ஒருவர் சந்திக்க சென்றதாகவும் ஆனால் அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நிலையில் கடந்த 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார். இருப்பினும் அவர் உடல் நலக் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் 
 
இருப்பினும் அவர் தற்போது தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெங்களூரில் தங்கி உள்ள சசிகலாவை கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் அவர்கள் சந்திக்க சென்றுள்ளார் 
 
ஆனால் சசிகலா தனிமைபடுத்திக் கொண்டிருப்பதால் யாரையும் சந்திக்க அனுமதி இல்லை என்று கூறப்பட்டதை அடுத்து யுவராஜ் திரும்பி சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் சசிகலாவை நேரில் சந்திக்க சென்றிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அடுத்த கட்டுரையில்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து! முதல்வர் அறிவிப்பு