வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சென்னையை தவிர்ப்பது ஏன்? பயணிகள் குமுறல்.

Mahendran
சனி, 28 செப்டம்பர் 2024 (11:22 IST)
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சென்னையை தவிர்ப்பது ஏன்? என்பது குறித்து பயணிகள் குமுறலுடன் கூறுவது என்ன என்பதை பார்ப்போம்.
 
 சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18,53,115 பேர் பயணித்துள்ளனர். இது கடந்த ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் 90,222 (5.1%) அதிகம்! 
 
ஆனால் ஒட்டுமொத்தமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைந்துள்ளது. சுங்கச் சோதனை என்ற பெயரில் பயணிகளை பல மணி நேரம் விமான நிலையத்தில் காக்க வைப்பதே இதற்கு காரணம் என பயணிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.
 
இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பலர், சென்னை விமான நிலையத்திற்கு வராமல், அருகே உள்ள பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற விமான நிலையங்களுக்கு சென்று விட்டு, அங்கிருந்து உள்நாட்டு விமானங்கள் அல்லது சாலை மார்க்கமாக சென்னை திரும்புகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஓட்டுக்கு 2 ஆயிரம் கொடுத்தாரு!... தவெக எம்.எல்.ஏ மீது தவெக நிர்வாகி புகார்!...

ஓபிஎஸ் மீது ஈபிஎஸ் போட்ட வழக்கு வாபஸ்.. ஈபிஎஸ் மீது ஓபிஎஸ் போட்ட வழக்கும் வாபஸ்.. ஒன்றிணைகிறார்களா?

ஒருசில ஹார்ட் டிஸ்க்குகளை திருடி எடுத்துவிட்டால் தப்பித்துவிட முடியுமா? அமைச்சர் சிடி நிர்மல்குமார்

20 நிமிடம் பேசிவிட்டு வேலையை பார்க்கிறார் முதல்வர் விஜய்.. 20 நாள் அவரது பேச்சை பற்றி கதறுகிறார்கள் மற்றவர்கள்...

முன்னாள் எம்.எல்.ஏ காலில் விழுந்து ஆசி பெற்ற துர்கா ஸ்டாலின்.. வைரல் வீடியோ

அடுத்த கட்டுரையில்
Show comments