1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By SInoj
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (20:57 IST)

தமிழகத்தில் எப்போது ரமலான் பண்டிகை? தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு

ramjan
தமிழ் நாட்டில் வரும் வியாழக்கிழமை அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று ஷரியத் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஹிஜ்ரி 1445 ரமலான் மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 9-04-24 ஆம் தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
 
ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 11-424 ஆம் தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. 
 
ஆகையால் ஈதுல் பித்ர் வியாழக்கிழமை 11.04.24 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.