தமிழகத்தில் 3 சட்டசபை, ஒரு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் எப்போது? பரபரப்பு தகவல்!
தமிழகத்தில் திருவொற்றியூர் எம்எல்ஏ கேபிபி சாமி, குடியாத்தம் எம்எல்ஏ காத்தவராயன், திருவல்லிக்கேணி எம்எல்ஏ ஜெ அன்பழகன் ஆகியோர் காலமானது தெரிந்ததே. அதேபோல் சமீபத்தில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்பி ஆக இருந்த வசந்த குமார் அவர்களும் காலமானார். இதனை அடுத்து தற்போது தமிழகத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளும், ஒரு பாராளுமன்ற தொகுதியும் காலியாக உள்ளது. இந்த நிலையில் இந்த நான்கு தொகுதிகளிலும் எப்போது இடைத்தேர்தல் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
பீகார் சட்டசபையின் காலக்கெடு வரும் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து அந்த மாநிலத்தில் நவம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது
இந்த ஆலோசனை கூட்டத்தில் பீகார் தேர்தலோடு நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பீகார் மாநில சட்டசபைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று சட்டசபை மற்றும் ஒரு பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது