திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (13:37 IST)

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடந்தால் என்ன மாற்றம் நடந்துவிடும் ? சீமான்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடந்தால் என்ன மாற்றம் நடந்துவிடும் ? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்ட மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யவிருப்பதாக தகவல் பரவியது.

இதையடுத்து,  வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்ட மசோதாவை  மத்திய பாஜக அரசு தாக்கல்  செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்தும் சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய முன்னால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: ''ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் என்ன மாற்றம் நடந்துவிடும்? ஒரு பிரதமர் பதவியை இழந்தால் ஒட்டு மொத்த தேசத்தின் தேர்தலா? ஒரு மாநில ஆட்சி கலைக்கப்பட்டால் ஒட்டுமொத்த தேசத்திற்கும் தேர்தலா? ஓட்டிற்குப் பணம் கொடுப்பது நிறுத்தினால் தேர்தல் செலவு குறையும்'' என்று தெரிவித்துள்ளார்.