1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ் கியான்
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2019 (21:08 IST)

மொழி அரசியலை கையில் எடுக்கிறோமா ? தமிழகத்தின் மனநிலை என்ன ? ஹெச்.ராஜா டுவீட்

தமிழின் தொன்மையை போற்றினால் மொழி அரசியலை கையிலெடுக்கிறதா என்கின்றனர். தமிழை காட்டுமிராண்டி மொழி, சனியன் தமிழ் என்றால் தமிழர் தந்தை என்கின்றனர். இது என்ன மனநிலையோ?  என பாஜக கட்சியின் தேசியத் தலைவர் ஹெச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை ஐஐடி விழாவில், கலந்துகொண்ட பிரதமர் மோடி, இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் “ஹேக்கத்தான்” தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, ஹேக்கத்தான் வெற்றிக்கு உதவிய சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மோடி, ஹேக்கத்தான் இளைய தலைமுறையினரின் அறிவுத்திறனை வளர்க்க உதவும், இந்தியா 5 லட்சம் கோடி பொருளாதாரமாக வளர ஹேக்கத்தான் உதவும்” என கூறினார்.
 
மேலும், கற்சிறபங்கள், பழமையான கோயிலுக்கு பெயர் போன மாமல்லபுரத்தை நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் பார்வையிட வேண்டும் என கூறினார். இதனை தொடர்ந்து தமிழர்களின் விருந்தோம்பலை குறித்து பேசிய, மோடி, ”தமிழர்களின் விருந்தோம்பல் மிகவும் சிறந்தது, அவர்களின் இட்லி, தோசை, வடை என அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என கூறினார். பின்பு ஐஐடியில் உள்ள அறிவியல் கண்காட்சியினை பார்வையிட்டார்.
 
இது குறித்து தமிழக பாஜக தலைவர்கள் பிரதமர் மோடி தமிழைப் பெருமைப் படுத்திப் பேசுவதாகக் கூறி, இணையதளங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ;தொகைக்காட்சிகளிலும் பேட்டி அளித்தும் வந்தனர். பிரதமரின் கருத்துக்கு அதிமுக கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
 
இந்நிலையில், பிரதமர் மோடி தமிழைப் புகழ்ந்துள்ளது குறித்து, ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாவதம் நடைபெற்று வருகிறது. அதில், தமிழின் தொன்மையை போற்றினால் மொழி அரசியலை கையிலெடுக்கிறதா என தலைப்பிட்டு விவாதம் செய்து வந்தனர்.
 இதற்கு பதிலடியாக ஹெச்.ராஜா இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :தமிழின் தொன்மையை போற்றினால் மொழி அரசியலை கையிலெடுக்கிறதா என்கின்றனர். தமிழை காட்டுமிராண்டி மொழி, சனியன் தமிழ் என்றால் தமிழர் தந்தை என்கின்றனர். இது என்ன மனநிலையோ? எனக் கேள்விகேட்டுள்ளார்.