செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்கியான்
Last Updated : திங்கள், 16 செப்டம்பர் 2019 (15:37 IST)

அரசின் பணிகள் என்ன ...? பா.ம.க., தலைவர் ராமதாஸ் ’டுவீட்’

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான  பாஜக .,  கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று,  இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. சமீபத்தில் புதிய கல்வி வரைவுக் கொள்ளை மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதுகுறித்து மக்கள் கருத்துக்கூறலாம் எனவும் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்தக் கல்விக்கொள்கைக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சிகள்,மற்றும் சில சினிமா பிரபலங்களைச் சேர்ந்த சிலர் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இந்தக் கல்விக்கொள்கையில் ஆங்கிலம், தாய்மொழியுடன் ஹிந்தியும் கற்கவேண்டும் என்று கூறியிருந்ததுதான் அனைவரது எதிரிப்புக்குக் காரணமாக இருந்தது. குறிப்பாக,நடிகர் சூர்யா, மத்திய அரசின் இப்புதிய கல்விக்கொள்கை குறித்து கடுமையாக வார்த்தைகளை ஒரு நிகழ்ச்சி மேடையில் பேசியது சர்ச்சையானது.
 
இந்த நிலையில், இந்தக் கல்விக் கொள்கை குறித்து மறுபரிசீலிப்பதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இதற்கிடையில், பள்ளியில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, பள்ளியில் 9ஆம் வகுப்பு  வரையுள்ள அனைத்து மாணவர்களையும் ’ஆல் பாஸ்’ செய்துவிடுவது வழக்கமாக இருந்ததால், அவர்கள் அடுத்த வகுப்பிலும், பொதுத்தேர்விலும் சோபிக்காமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
 
எனவே, மாணவர்களை தகுதி வாய்ந்தவர்களாக உருவாக்கும் நோக்கில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக அறிப்புகள் வெளியானது. இதையடுத்து முக்கிய எதிர்க்கட்சிகள் மற்றும் கல்வி அமைப்பாளர்களை இதை எதிர்த்துவருகின்றனர்.
 
இந்த நிலையில் பாமக தலைவர், டாக்டர் ராமதாஸ் இன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
''தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள 48% தொடக்கப்பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக  உள்ளன. அதாவது 5 வகுப்புகளுக்கு 2 ஆசிரியர்கள் தான் இருப்பார்கள். 5-ஆம் வகுப்புக்கு தனி ஆசிரியர் இல்லாத நிலையில் அந்த வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது எந்த வகையில் நியாயம்?'' என்று அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும், ''கட்டாயத் தேர்ச்சியால் மாணவர்களின் கல்வித்தரம் குறைகிறது என்ற வாதமே தவறு. அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்குவதும், அதன் மூலம் அனைத்து மாணவர்களின் கல்வித்தரமும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்வதும் தான் அரசின் பணி ஆகும்''என தெரிவித்துள்ளார்.