வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 11 நவம்பர் 2024 (07:26 IST)

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்..!

Rain
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் இன்னும் ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகம் முழுவதும் பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் தமிழக மற்றும் இலங்கை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்ப்பதால் கடலோர பகுதியில் நல்ல மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva