1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By SInoj
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (22:03 IST)

5-ஆம் கட்ட பிரச்சாரம் நாளை முதல் தொடங்குகிறோம்- அமைச்சர் உதயநிதி

udhay
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி  மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், 5-ஆம் கட்ட பிரச்சாரத்தை தென் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நாளை தொடங்குவதாக  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
’’மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, INDIA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 23- ஆம் தேதி தொடங்கி, 4 கட்ட பிரச்சார பயணங்களை முடித்துள்ளோம்.
 
5-ஆம் கட்ட பிரச்சாரத்தை தென் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நாளை தொடங்குகிறோம்.
 
அடுத்த 3 தினங்கள், குமரி,  நெல்லை, தென்காசி மற்றும் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க உள்ளோம்.
 
அனைவரும் ஓரணியில் நின்று பாசிசத்தை வீழ்த்துவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.