1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2016 (14:18 IST)

சசிகலா விவகாரம் ; இப்போது என்ன அவசரம்? : எதிர்ப்பு தெரிவிக்கும் ஆனந்தராஜ்

அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என நடிகரும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான ஆனந்தராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் அவரின் நெருங்கிய தோழி சசிகலாவை அமர வைக்க பெரும்பாலான அதிமுகவின் குரல் கொடுத்து வருகின்றனர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களும் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பொதுச்செயலாளரை தேர்தெடுக்கும் விவகாரத்தில் கொஞ்சம் பொறுமை அவசியம் என ஆனந்தராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
 
காலம் அறிந்து செயல்படுவது அவசியம். இது சரியான தருணமா என அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். எ.எல்.ஏ மற்றும் அமைச்சர்கள் மட்டும் அதிமுக இல்லை. கடை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கவேண்டும். 
 
அந்த தொண்டர்களில் நானும் ஒருவன். முக்கியமாக, பெண்கள் அதிகம் வாக்களித்துதான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அனவே அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். எதை செய்தாலும் நிதானமாக செய்ய வேண்டும். அதிமுகவிற்கு ஒரு நிரந்தர தலைவர் வர வேண்டும். எனவே அவரை தேர்ந்தெடுப்பதில் சற்று நிதானம் கடைபிடிக்கப்பட வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.