2021 -ல் நாங்க தான் இருக்கனும்... விஜய் ரசிகர்களின் போஸ்டர் !
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் மொத்த வியாபாரமும் முடிவடைந்துவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் விஜய் கருப்பு சட்டை அணிந்து கறுப்புக் கண்டாடி போட்டுக் கொண்டு இருப்பது போன்ற போஸ்டர் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டரை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் விஜய்யின் ரசிகர்கள் இன்று ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளனர். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.
அடுத்தவருடம் , தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் , காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றம் சார்பில் அப்பகுதியில் ஒரு போஸ்டர் ஒட்டபட்டுள்ளது.
அதில், 234 தொகுதிகளையும் சைலண்டா இருக்கனும் 2021-ல் நாங்கதான் இருக்கணும் என்று பதிவிட்டு அதன் கீழ் மாஸ்டர் மாண்புமிகு தளபதி என விஜய் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை பதிவிட்டுள்ளனர்.
தற்போது இந்த அரசியல் போஸ்டர் வைரல் ஆகிவருகிறது.