திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 8 மார்ச் 2021 (18:06 IST)

பெண்களின் மதிப்பு தெரியாமல் வாழ்கிறோம் - நடிகர் கமல்ஹாசன்

இன்று உலகமெங்கும் மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது. எல்லோரும் சிங்கப் பெண்களுக்கு பாராட்டுகளும்,வாழ்த்துகளும் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் பெண்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

மானுட குலத்தின் சரிபாதி பெண்களென உலகு நினைக்கிறது. உயர்கிறது. நம் நாட்டில், மாநிலத்தில் அந்த நிலையா இருக்கிறது? பெண்ணுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்கிற, ஊக்கப்படுத்துகிற ஆட்சிகளைத் தூக்கி எறியவிருக்கும் தோழியரே வாழ்த்துகிறேன் எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், உலகத்தில் நடந்த எல்லாப் புரட்சிகளும் பெண்களால்தான் நடந்தது. பெண்மைதான் நான் படித்த புத்தகங்களிலேயே பெண்மைதான் சிறந்த புத்தகம். பெண்களின் மதிப்பு தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். எங்கள் கட்சியில் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுதிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.