வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 மார்ச் 2019 (17:43 IST)

ஐபிஎல்... எதிர்த்து போராடிய தமிழர்களை காணோம் ? - கஸ்தூரி

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில்  ஐபில் சீசன் களைகட்டும்.ஆனால் கடந்த வருடம் காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை என்பதற்காக சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கடந்த வருடம் சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறவில்லை.
இந்நிலையில் இன்று சென்னையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டிகள் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணி மோதுகிறது.
 
இதுபற்றி நடிகை கஸ்தூரி தன் டுவிட்டர் பக்கத்தில்,
 
இன்று ஐபிஎல் விமர்சையாக துவக்கம். போனவருடம் போராடிய  தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை தமிழ்நாட்டில் காவிரி நீர் கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ? இவ்வாறு அதில் தெரிவித்திருக்கிறார்.