திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (14:33 IST)

செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடும் உபரிநீர் குறைப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியது என்பதும் குறிப்பாக செம்பரபாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிலையில் உபரிநீர் திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களாக 2,000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை பகுதிக்குள் வரும் நீரின் அளவு குறையும் என்றும் கூறப்படுகிறது