திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (21:03 IST)

அமைச்சரவை மாற்றம் அறிவிப்பு வராததற்கு விஜய் காரணமா?

Uday Vijay
இன்று மாலை அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் கொடியேற்று விழா பரபரப்பு காரணமாகத்தான் அமைச்சர்களை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடிய நிலையில் புதிய அமைச்சரவை மாற்றம் குறித்த ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாகவும் துணை முதல்வர் அறிவிப்பு உள்பட கூடுதலாக சில அமைச்சர்கள் பெயர் இடம் பெறும் என்றும் அதேபோல் சில அமைச்சர்கள் நீக்கமும் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இன்று காலை தமிழக வெற்றி கழகத்தின் கொடியை நடிகர் விஜய் ஏற்றி வைத்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக இந்த செய்திக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தன.

இந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டால் நன்றாக இருக்காது என்பதற்காகத்தான் திமுக, துணை முதல்வர் அறிவிப்பு மற்றும் அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பை ஒத்தி வைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து நாளை அல்லது நாளை மறுநாள் அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Edited by Siva