வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (09:21 IST)

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி.. வீடு வீடாக சென்று இன்று முதல் தொடக்கம்..

Election Commision
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று முதல் நடைபெறுவதாகவும் வீடு வீடாக தேர்தல் ஆணைய அலுவலர்கள் சென்று இந்த பணியை மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கும் நிலையில் அக்டோபர் 18ஆம் தேதி வரை இந்த பணி நடைபெறும் என்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்கு சாவடி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை முரண்பாடுகள் குறித்து அறிதல், வாக்காளர் பட்டியலில் தரமான புகைப்படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடிந்தவுடன் அக்டோபர் 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 28 வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் பணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் இணைக்க வரும் விண்ணப்பங்கள் டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva