1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (17:45 IST)

தமிழ்கத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் – ஜனவரி 15 ஆம் தேதி வெளியீடு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கப்பட உள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு அடுத்த ஆண்டு மே மாதத்தோடு முடிய உள்ளது. இதையடுத்து தேர்தல் நடக்க உள்ள நிலையில் புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.