1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (07:07 IST)

கொட்டும் மழையிலும் விடிய விடிய கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய தொண்டர்கள்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று இரவு சென்னை மெரீனாவில் அண்ணா சமாதியின் பின்னால் முழு அரசு மரியாதையுடன் , 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. திமுக தொண்டர்களின் நெகிழ்ச்சியான கரகோசம் அவரை வழியனுப்பி வைத்தது.
 
இந்த நிலையில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னரும் திமுக தொண்டர்கள் விடிய விடிய கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவருடைய சமாதியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் இன்று அதிகாலையிலும் திமுக தொண்டர்களின் கூட்டம் அலைமோதுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
அஞ்சலி செலுத்த வரும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருப்பதால் விடிய விடிய போலீசார்கள் கருணாநிதியின் சமாதிக்கு போதிய பாதுகாப்பு வழங்கி அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பார்த்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.