கருணாநிதி பார்த்த 14 பிரதமர்கள்
திமுக தலைவர் கருணாநிதி தன்னுடைய அரசியல் வாழ்வில் இந்தியாவின் 14 பிரதமர்களை பார்த்த நீண்ட நெடிய அரசியல் அனுபவத்தை கொண்டவர். அவர் முதன்முதலாக கடந்த 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு.
அதன் பின்னர் லால்பகதுர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங், ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ், தேவகவுடா, ஐ.கே.குஜரால், வாஜ்பாய், மன்மோகன்சிங் மற்றும் நரேந்திர மோடி என 14 பிரதமர்களை தன்னுடைய அரசியல் வாழ்வில் சந்தித்துள்ளார்.
இவர்களில் வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜரால் மற்றும் வாஜ்பாய் ஆகியோர்களுடன் மிக நெருங்கிய நட்புறவை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்திராகாந்தி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் பிரதமராக இருந்தபோது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.