Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Written By siva
Updated: வியாழன், 6 ஜனவரி 2022 (07:47 IST)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் அந்த ஆலையில் பணி செய்து கொண்டிருந்த மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள் என்பதும் மேலும் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள் என்பதையும் பார்த்தோம். 
 
மேலும் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான குடும்பத்தினர்களுக்கு ரூபாய் 3 லட்சம் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன தீ காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முனியசாமி என்பவர் உயிரிழந்தார் என்றும் மேலும் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

இடைத்தேர்தலில் ஜெயிப்பது பெரிய விஷயமில்லை.. அதிமுக, திமுக டெபாசிட் வாங்க கூடாது.. முதல்வர் விஜய் உத்தரவா?

10 ஆண்டுகளாக தீராத ஆக்கிரமிப்பு விவகாரம்.. தவெக அரசில் துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்த காவல்துறை...

விஜயை ஸ்டாலின் ஒரு தலைவராகவே பார்க்கல!. அதான் பிரச்சனை!.. திருமாவளன் பேச்சு..

1989-ஆம் ஆண்டு முதல் தீராத சொத்து பிரச்சனை.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து புகார் அளித்த பள்ளித்தோழர்...

ஆண்டு வருமானம் ரூ.32 லட்சம்.. ஆனாலும் வாழ்க்கையில் விரக்தி.. புலம்பும் 30 வயது இளைஞர்...

அடுத்த கட்டுரையில்
Show comments