ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 27 ஜூலை 2017 (16:29 IST)

இன்ஸ்பெக்டர் கைதானதை கிடா வெட்டி கொண்டாடிய கிராம மக்கள் (வீடியோ)

கடலூர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சப் புகாரில் கைதானதை கிராம மக்கள் கிடா வெட்டி, வெடி வெடித்து கொண்டாடியுள்ளனர்.


 

 
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் தமிழ்மாறன். சிறுவாம்பூர் கிராமத்தில் இரு கோஷ்டிகளிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் காவல்நிலையம் சென்றுள்ளார். பிரச்சனையை தீர்க்க இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
 


முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இன்ஸ்பெக்டரிடம் ரூ.20,000 கொடுத்துள்ளார். இதை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மறைந்திருந்து இன்ஸ்பெக்டர் தமிழ்மாறனை கைது செய்தனர். இதை அறிந்த சுற்று வட்டார கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். சிலர் கிடா வெட்டி விருந்து வைத்து தீபாவளி போல் கொண்டாடியுள்ளனர்.