1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 3 ஜூலை 2024 (10:26 IST)

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில்மகேஸ்பொய்யாமொழி!

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், காணை தெற்கு ஒன்றியம், சிறுவாக்கூர் கிராமத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரையில் வீடுதோறும் சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்குகளை சேகரித்தார்.
 
அப்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள், மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர் இரா.இலட்சுமணன்  சட்டமன்ற உறுப்பினர் ஒன்றியச் செயலாளர் கல்பட்டு ராஜா, தேர்தல் பொறுப்பாளர்-திருச்சி கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் மற்றும்  மாவட்ட திமுக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தீவிர வாக்குகளை சேகரித்தனர்.