1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (17:03 IST)

நெல்லை பள்ளி விபத்து: விஜயகாந்த் அறிக்கை!

நெல்லையில் உள்ள பள்ளி கழிவறையின் சுற்றுச்சுவர் இடிந்து 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாகிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
நெல்லை தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 
பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் எந்த தவறும் செய்யாத பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் தற்போது போயுள்ளதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்