திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 டிசம்பர் 2021 (13:41 IST)

நெல்லை பள்ளி விபத்து: விசாரணை குழு அமைக்கப்படும் என அமைச்சர் தகவல்

நெல்லை பள்ளி விபத்து குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக காரணமாக இரண்டு மாணவர்கள் உயிரிழந்தார்கள் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் இது குறித்து பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்றும் கட்டிட விபத்து தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இது போன்ற விபத்துக்கள் இனி எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிப்பதாகவும் அவர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.