1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: சனி, 20 மே 2017 (13:35 IST)

ரஜினியின் வருகையால் தேமுதிகவுக்கு பாதிப்பா?- விஜயகாந்த் பதில்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி இடத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-


 

இந்தியாவிலேயே ஒரு ஓட்டுக்கு மூன்று  முதல்வரகளை கண்டவர் தமிழர்களாகத்தான் இருக்கும். ஜெயலலிதா காலமானார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். இப்போது எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். தமிழக அரசு விரைவில் கவிழும். பாஜக ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு யார் வந்தாலும் மக்கள் ஏற்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் தவறில்லை.ரஜினியின் வருகையால் தேமுதிகவுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என்றார்.