வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (19:40 IST)

உலக சாதனை படைத்த கோலிக்கு விஜயகாந்த் வாழ்த்துகள்

virat kohli
இன்று இந்தியா-  நியூசிலாந்து  அணிகள் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய விராட் கோலி சதம் அடித்துள்ளார். இது அவரது ஐம்பதாவது சதமாகும்.

இதுவரை அதிகமாக சச்சின் டெண்டுல்கர் 49 சதமடித்துள்ள நிலையில் அவரது சாதனையை விராட் கோஹ்லி முறியடித்துள்ளார். இதற்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் வாழ்த்தி, பாராட்டியுள்ளார்.

பல்வே பிரபலங்கள் விராட் கோலிக்கு வாழ்த்துகள் கூறி வரும் நிலையில்,  தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் விராட் கோலிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது;

 
’’இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் 20 ஆண்டுகாலசாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும்  படைத்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை கொள்ளும் தருணமாகும்.

இந்திய கிரிக்கெட் வீரர்  விராட் கோலி மேலும் மேலும் பல சாதனைகளை படைத்து இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.