வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2019 (15:05 IST)

நீண்ட இடைவெளிக்கு பிறகு தொண்டர்களை சந்தித்த விஜய்காந்த் – கலைகட்டிய தேமுதிக அலுவலகம் !

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேமுதிக அலுவலகத்தில் இன்று தொண்டர்களை சந்தித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலப் பிரச்சனைகளால் கடந்த சில மாதங்களாக ஓய்வு எடுத்து வருகிறார். அதனால் கட்சி சார்ந்த பணிகள் எல்லாவற்றையும் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மூத்த மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

இதனால் தேமுதிக கடந்த சில மாதங்களாக அரசியலில் எந்தவிதமான அதிர்வுகளையும் ஏற்படுத்தாமல் உள்ளது. பல தேமுதிக தொண்டர்கள் இனி இந்த கட்சியில் எதிர்காலம் இல்லை என்ற முடிவுக்கு வந்து பிறக் கட்சிகளுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து நாளை விஜயகாந்தின் 67 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்தித்த அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வந்திருப்பது தொண்டர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.