திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (15:21 IST)

ரஜினியுடன் தொலைபேசியில் பேசிய விஜய்.. என்ன பேசினார்கள்?

சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதும் இந்த கட்சியின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கட்சி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் கட்சிக்கு பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு தனது வாழ்த்துக்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு தொலைபேசி வாயிலாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி, விஜய் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளத்தில் மோதிக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினியுடன் சமாதானமாக போனால்தான் அரசியலில் நீடிக்க முடியும் என்பதால் ரஜினிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran