செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (08:04 IST)

திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்!

ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியில் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் க சொ க கண்ணனுக்கு அப்பகுதி விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் தீவிரமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேட்பாளர்களும் சுய உதவிக்குழுக்கள், சிறு சிறு அமைப்பினர் ஆகியோரின் ஆதரவைக் கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் மக்கள் இயக்க அமைப்பைச் சேர்ந்த சிலர் ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளர் க சொ க கண்ணன் அவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படத்தை கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் விஜய் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காத நிலையில் தன்னிச்சையாக மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.