வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (12:07 IST)

”விஜய்க்கு அந்த உரிமை இருக்கிறது”.. பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

நடிகர் விஜய்க்கு அரசியல் கருத்துகள் கூற உரிமை உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், பேசிய நடிகர் விஜய், சுபஸ்ரீ உயிரிழப்பிற்கு காரணமாக இருந்தவர்களை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். விஜய்யின் இந்த கருத்து குறித்து அதிமுகவினர் பலர் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன், அவர் அரசியல் கருத்துக்களை கூறக்கூடாது என யாரும் கூறமுடியாது, அவருக்கு அந்த உரிமை இருக்கிறது” என கூறியுள்ளார்.

அதிமுகவினரும் பலரும் நடிகர் விஜயை விமர்சித்து வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரித்தும் இல்லாமல் விமர்சித்தும் இல்லாமல் தனது கருத்தை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது