1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 17 பிப்ரவரி 2024 (11:33 IST)

அரசியல் கட்சியின் பெயரை திடீரென மாற்றும் நடிகர் விஜய்.. என்ன காரணம்?

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் கட்சியின் பெயரில் ‘க்’ வரவேண்டும் என்று பல கருத்து கூறினர். 
 
ஒரு கட்சியின் பெயரைக் கூட எழுத்துப்பிழை இல்லாமல் வைக்க தெரியாத விஜய் எப்படி தமிழகத்தை ஆட்சியைப் பிடிப்பார் என்றும் கடும் விமர்சனங்கள் இருந்தன. 
 
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் தற்போது தனது கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து தமிழக வெற்றிக் கழகம் என பெயர் மாற்ற உள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
நியாயமான விமர்சனங்களை ஏற்பது தான் தலைமைக்கு அழகு என கட்சி நிர்வாகிகளிடம் விஜய் தெரிவித்ததாகவும் எனவே எழுத்துப்பிழை இருப்பதாக விமர்சனங்கள் எழுந்ததை ஏற்றுக்கொண்டு தனது அரசியல் கட்சி பெயரில் ‘க்’ சேர்க்க  முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
 
Edited by Mahendran