ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 17 பிப்ரவரி 2024 (08:08 IST)

வணங்கான் டீசர தயார்….இயக்குனர் பாலா கம்பேக்குக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

பாலா இயக்கிய வணங்கான் திரைப்படத்தில் நடித்த் தயாரிக்க ஒப்பந்தம் ஆகி இருந்த சூர்யா ஒரு கட்டத்தில் விலகிவிட்டார். அதற்குக் காரணம் இயக்குனர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்று சொல்லப்பட்டது.

இதையடுத்து இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்போது வணங்கான் படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் அருண் விஜய்க்கு ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது படத்தின் டீசர் ஒன்றை தயார் செய்துள்ள படக்குழு அதை பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.