ஜெ வீடியோ வெளியீடு வழக்கு: வெற்றிவேலின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற ஒரு நாளுக்கு முன்பு தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது எடுத்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்
ஆர்.கே. நகரில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பின்னர் இந்த வீடியோ வெளியானதால் இது தேர்தல் நடைமுறைக்கு எதிரானது என்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டது
இதனால் எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்
இந்த மனு மீதான விசாரணை முடிந்து வெற்றிவேல் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். எனவே வெற்றிவேல் கைது விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.