புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (18:01 IST)

பாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது – ரஜினியை தாக்கிய அரசியல் வாதி !

திரைப்படத்தில் பாட்ஷாவாக மட்டும் நடித்தால் போதாது வண்ணாரப்பேட்டைக்கு வாருங்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேசிய ரஜினி, இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், அப்படி அவர்கள் பாதித்தால் அவர்களுக்காக முதல் ஆளாக ரஜினிகாந்த் வருவான் எனக் கூறினார்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வண்ணாரப் பேட்டையில் அமைதியாக போராடிக் கொண்டு இருந்த இஸ்லாமியர்களைக் காவல்துறை தாக்கியது. இதில் முதியவர் ஒருவர் பலியானார். இதையடுத்து சென்னை மற்றும் பல நகரங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வருவேன் எனத் தெரிவித்த ரஜினியை இப்போது வண்ணாரப் பேட்டைக்கு வர சொல்லி சமூக வலைதளங்களில் குரல்கள் எழுந்துள்ளன. அதையடுத்து திருவாரூரில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ‘திரைப்படங்களில் பாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது. வண்ணாரப்பேட்டைக்கு வாருங்கள்’ என அழைத்துள்ளார்.