Daily Horoscope
✕

சீரடி சாய்பாபா கோவிலில் 15 வது வருடாபிஷேக விழா!

Written By J.Durai
Updated: புதன், 5 ஜூன் 2024 (17:20 IST)
மதுரை மாவட்டம்,  திருவேடகம் அருகே, வைகை நதிக்கரையோரம் அமைந்துள்ள சீரடி சாயிபாபா கோவிலில்,15 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது.
 
வருடாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 3ஆம் தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரை விக்னேஸ்வர பூஜையுடன் யாகவேள்வி தொடங்கி நடைபெற்றது.
 
தொடர்ந்து, பூர்ணாகதி சதுர்வேத பாராயணம், நடைபெற்று மகா தீபாரதனையுடன் முதல் கால யாக பூஜை நிறைவு பெற்றது. 
 
அதனைத் தொடர்ந்து, 4ம் தேதி காலை 10 மணிக்கு மேல் இரண்டாவது கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 12 மணி அளவில் கடம் புறப்பாடாகி 15 ஆம் ஆண்டு வருடா பிஷேக விழா நடைபெற்றது.
 
அதனைத் தொடர்ந்து, சாய்பாபாவுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. தீபாராதனை காட்டப்பட்டது .
 
இதனை தொடர்ந்து கோவில் மண்டபத்தில், பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

எல்லாம் காட்டு

மாநில அரசின் தோல்வியா?.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோட்டைவிட்ட தவெக அரசு!...

உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா.. மின்கம்பியில் பதாகை உரசி 3 இளைஞர்கள் பலி..

தொகுதி மறுவரையறை மசோதா... ஸ்டாலின் திட்டவட்டமான கருத்து...

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு .. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்...

தீபம் ஏத்தியே ஆகணும்.. உச்சநீதிமன்றம் மீண்டும் அதிரடி.. என்ன செய்யப்போகிறார் விஜய்?...

அடுத்த கட்டுரையில்
Show comments