செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 அக்டோபர் 2022 (11:33 IST)

இந்தி திணிப்புக்கு எதிராக வைரமுத்து ஆர்ப்பாட்டம்: நெட்டிசன்கள் சரமாரி கேள்வி

vairamuthu
இந்தி திணிப்புக்கு எதிராக கவிஞர் வைரமுத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் பாடம் மொழியாக இல்லை என்பதும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
தமிழை பாடமொழியாக வைக்க முதலில் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதன் பின்னர் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராடலாம் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் 
 
தமிழ் மொழிக்கு பதிலாக மாணவர்கள் ஹிந்தியை படித்துக்கொண்டிருக்கும் பள்ளிகளை பெரும்பாலும் திமுகவினர் நடத்தி வரும் நிலையில் திமுக ஆதரவாளரான வைரமுத்து ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் ஹிந்தி திணிப்பை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைரமுத்து சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப் படைப்பாளர்கள் சென்னை மாவட்ட தமிழ் இலக்கிய அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்று உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Siva