புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (19:53 IST)

மகன் பெயரையும் மாற்றிய வைகோ: இன்று முதல் என்ன பெயர் தெரியுமா?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நிஜமான பெயர் வை கோபால்சாமி என்று இருந்தது என்பதும் எண்கணித அதிர்ஷ்டத்திற்காக அவர் வைகோ என்று பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையை வைகோவின் மகன் துரை வையாபுரி என்ற பெயரும் தற்போது துரை வைகோ என மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வைகோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து வைகோவுக்கு பின்னர் மதிமுகவை துரை வைகோ தலைமையேற்று நடத்துவார் என்று கூறப்படுகிறது. தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் வைகோ எதிர்காலத்தில் தனித்துப் போட்டியிடும் என்றும் துரை வைகோ தலைமையில் மதிமுக இளைஞர்களை கவரும் கட்சியாக இருக்கும் என்றும் அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்