புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (10:25 IST)

பெரியாரின் கனவை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்! – வைகோ புகழாரம்!

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தின் மூலமாக பலர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வைகோ வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது முதல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை மீட்பது, தமிழில் அர்ச்சனை என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் பலர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர், இதற்கு பலரும் ஆதரவையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள மதிமுக பொதுசெயலாளர் வைகோ “தந்தை பெரியார் மறைந்தபோது அனைவரும் அர்ச்சகராகும் சட்டம் நடைமுறைக்கு வரவில்லையே என்ற கவலை அவரை முள்ளாய் குத்தியது. அந்த முள்ளோடுதான் பெரியாரை புதைத்திருக்கிறோம் என முன்னதாக கலைஞர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இன்று மு.க.ஸ்டாலின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் மூலம் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்” என கூறியுள்ளார்.