செவ்வாய், 11 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2016 (16:30 IST)

கூட்டணி அரசு உறுதி: மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்கள் நலக் கூட்டணி கட்சி சார்பில் 80 பக்கம் அடங்கிய தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணி கட்சியின் ஒருங்கினைப்பாளரான வைகோ, 80 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். 
 
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதக்க முக்கிய அம்சங்களாக வைகோ கூறியதாவது:
 
விவசாய கடன் ரத்து
 
இட ஒதுக்கீடு சட்டம்
 
மீனவர்களுக்கு மீன்பிடி குத்தகை.
 
திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு.
 
வேளாண் உற்பத்தி அதிகரிப்பு.
 
இலவச கல்வி.
 
படித்த இளைஞர்களுக்கு வேலை
 
லோக் ஆயுக்தா சட்டம்.
 
அன்னிய நேரடி முதலீடு தடுக்கப்படும்.
 
சுய உதவிக் குழு கடன்கள் ரத்து.
 
மறுசுழற்சி செய்யப்படும்
 
பேருந்து கட்டணம் உயர்வு ரத்து.
 
கல்விக் கடன் ரத்து.
 
மாணவர்களிக்கு இலவச பஸ் பாஸ்.
 
 
மேலும், மற்ற கட்சிகள் போல் இல்லாமல், தேமுதிக, தாமாக, மநகூ கட்சிகள் கூட்டணியில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றார் வைகோ.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...