1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (11:38 IST)

மாநிலங்களவை தேர்தல்: வைகோவின் மனு ஏற்பு

தமிழகத்தில் மொத்தம் ஆறு உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் அதிமுகவின் இரண்டு வேட்பாளர்கள், திமுகவின் இரண்டு வேட்பாளர்கள் மற்றும் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமக, திமுக கூட்டணி கட்சியான மதிமுக என மொத்தம் ஆறு பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்,
 
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வைகோ மீது நடைபெற்று வந்த தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது. இதில் வைகோ குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை உடனே கட்டிய வைகோ, தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் தீர்ப்பு ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டது
 
இந்த நிலையில் வைகோ மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். தேசத்துரோக வழக்கின் தீர்ப்பின் காரணமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டதால் திமுகவின் சார்பில் என்.ஆர்.இளங்கோ என்பவர் 4வது வேட்பாளராக நேற்று மனுதாக்கல் செய்தார், இதனால் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி மாநிலங்களவை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 4வது வேட்பாளர் போட்டியிட வாய்ப்பு இல்லை என கருதப்படுகிறது